12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உச்சமடையும் குரு : இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகவும் சுபபலன்களை வழங்கும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார். அதனால், குருபகவானின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிட ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.
தற்போது கோடைக்காலத்தின் அதிக வெப்பம் நிலவும் ‘நௌதபா’ காலம் தொடங்கியுள்ளது. இந்த காலம் மே 25 முதல் ஜூன் 2 வரை நீடிக்கிறது.

இந்த காலகட்டத்தில், குருபகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழையும் அரிய கிரக மாற்றம் நடைபெறவுள்ளது. இந்த முக்கியமான கிரகப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட ரீதியில் நம்பப்பட்டு வருகின்றது.
இந்த மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் போன்ற சிறப்பான பலன்களை பெறவுள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமான மாற்றங்களை கொண்டு வரக்கூடியதாக இருக்கும்.
குறிப்பாக வேலை மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் தானாகவே அமையும்.
இந்த காலத்தில் உங்கள் தன்னம்பிக்கையும் உற்சாகமும் அதிகரித்து, புதிய முயற்சிகளில் வெற்றி பெற உதவும். பொருளாதார நிலையும் மெதுவாக மேம்பட்டு, வாழ்க்கையில் வசதிகள் கூடும் வாய்ப்பு காணப்படுகின்றது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் பல நல்ல மாற்றங்களை தரக்கூடும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனநிறைவு உண்டாகும்.
இதுவரை காலமும் போட்ட உழைப்புக்கான பலன்களை இப்போது அனுபவிக்கும் வாய்ப்பு உண்டாகும் பணியிடத்தில் உங்கள் திறமையும் செயல்திறனும் பாராட்டப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
இதன் காரணமாக பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்திலும் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி புதிய வாய்ப்புகளின் கதவுகளை திறக்கக்கூடும். நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
நீண்ட நாட்களாக தாமதமாக இருந்த வேலைகள் இப்போது சுலபமாக நிறைவேறத் ஆரம்பிக்கும் இதுவரை இருந்த தடைகள் மற்றும் குழப்பங்கள் படிப்படியாக குறைந்து, முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும்.
தொழில் ரீதியில் புதிய பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது இடமாற்றம் போன்ற நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |