குரு பகவானின் இரட்டை பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போகுது!
ஜோதிடத்தில் குரு பகவான் மங்களகரமான கிரகமாகக் கருதப்படுகிறார். தேவர்களின் குருவான இவர், அதிர்ஷ்டம், அறிவு, செல்வம், குழந்தைப்பேறு, வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் திருமண வாழ்க்கைக்கு காரணியாக விளங்குகிறார்.
தனுசு, மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் பொதுவாக ஒரு ராசியில் ஓராண்டு காலம் பயணிப்பார். ஆனால், தற்போது அதிசார நிலையில் இருப்பதால், குரு பகவான் குறுகிய காலத்தில் ராசியை மாற்றுகிறார்.

இதனால் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை ராசி மாற்றம் ஏற்படுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பெருமளவில் பிரதிபலிக்கும்.
அந்த வகையில், அக்டோபர் 31ஆம் தேதி குரு பகவான் அதிசாரமாக ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகிறார்.தற்போது கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்கும் இவர், அன்று சிம்ம ராசிக்கும் மகம் நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சி அடைகிறார்.
ஒரே நாளில் நிகழும் இந்த ராசி மற்றும் நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடிவரப் போவதாக கணிக்கப்பட்டுள்ளது. இப்படி குரு பெயர்ச்சியால் பல வழிகளிலும் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
கும்பம்

கும்ப ராசியின் 7-ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும்.
நிதி நிலைமை மேம்படுவதுடன், கூட்டு தொழிலில் கணிசமான லாபமும் கிடைக்கும். சட்டப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரம்.
சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்வதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும்; பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகும். வாழ்க்கைத் தடைகள் நீங்கி, பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
மேஷம்

மேஷ ராசியின் 5-ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்வதால் மங்களகரமான பலன்கள் கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடைவதுடன், தொழிலில் வளர்ச்சியும் வியாபாரத்தில் லாபமும் அதிகரிக்கும்.
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்; பழைய பிரச்சனைகள் தீர்ந்து தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும். வணிகர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |