குரு, புதனால் ஏற்பட்ட யோகம்! இந்த 6 ராசிகள் பேரதிர்ஷ்டசாலியாம்
குரு மற்றும் புதன் இணைந்து உருவாகும் பரிவர்த்தனை யோகத்தினால் அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
குரு மற்றும் புதன்
ஜோதிடத்தின்படி கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்மறையாகவும், சிலருக்கு நேர்மறையான தாக்கத்தையும் உண்டாக்கும்.
தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வரும் நிலையில், மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் இதற்கு காரணமாவாராம்.
ஏப்ரல் 11ம் தேதி மீன ராசிக்குள் புதன் நுழைய உள்ள நிலையில், மீன ராசியின் அதிபதி குரு என்பதால் பரிவர்த்தனை யோகம் உருவாகின்றது.
இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியினால் உருவாகும் யோகம் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்தினை அளிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த யோகத்தில் வேலையில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.
இதுவரை கைக்கு வராமல் இருந்த உங்களது பணம் தற்போது வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

மிதுனம்
குரு மற்றும் புதனால் ஏற்பட்ட யோகத்தினால் மிதுன ராசியினருக்கு அனைத்து முயற்சியிலும் வெற்றி கிடைப்பதுடன், நிதிநிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றமும் கிடைக்கும்.
பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைப்பதுடன், திடீர் பண வரவு ஏற்படும். படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்களாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த யோகத்தினால் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கும் எதிர்பார்த்த வேலையும் கிடைக்கும்.
வருமானத்தில் உயர்வு, பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், சொத்த தொடர்பான பிரச்சனையும் முடிவிற்கு வரும். வெளிநாடு செல்ல வாய்ப்பும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினருக்கு எதிர்பாராத நிதி ஆதாயம் கிடைப்பதுடன், நிதி தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றியும் கிடைக்கும்.
சொத்துக்கள் அதிகரிப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதையும் கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிடைக்குமாம்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு இந்த யோகத்தினால் பண வரவு அதிகரிப்பதுடன், பணி புரிபவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
பங்கு சந்தை, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், போட்டிகளில் வெற்றியும் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மீது இருந்த பிரச்சனை தீரும்.

மீனம்
மீன ராசியினருக்கு வருமானம் அதிகரிப்பதுடன், சொத்துக்கள் குவியவும் செய்கின்றது. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும், வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கலாம். வங்கியில் இருப்பு அதிகரிக்கும். நீண்ட காலம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |