ஜுலை மாதத்தில் அதிர்ஷ்டசாலியாகும் ராசியினர் யார்னு தெரியுமா?
2026 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமானது ஜூலை மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மாதந்தோறும் தங்களின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, பல யோகங்களையும் உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஜூலை மாதத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றான இந்திர யோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகமானது ஒருவரது வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி போன்றவற்றை கொண்டு வரும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 6 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இப்போது ஜூலை மாதத்தில் உருவாகும் இந்திர யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் உங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றத்தைக் காண்பீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! ஜூலை மாதம் சாதகமாக இருக்கும். உறவுகளில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபட்டு, ஆற்றலுடனும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெறுவதோடு, அதில் திறம்பட செயல்படவும் செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். கிரக நிலைகளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே! ஜூலை மாதமானது நிதி முதலீடுகளை செய்ய உகந்ததாக இருக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே! ஜூலை மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! ஜூன் மாதத்தில் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகள் குவியும்.
