இனி ஒரு மாதத்திற்கு அதிர்ஷ்டம் தான்... செவ்வாய் பெயர்ச்சியில் ராஜயோகத்தை அள்ளிச் செல்லும் 3 ராசிக்காரர்கள்
நவக்கிரகங்களுக்கு அதிபதியான செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைகிறார்.
இவரின் இடப்பெயர்ச்சியால் சுப, அசுப பலன்கள் கிடைக்கும். அப்படி செவ்வாய் பகவான் ஜுலை 1ஆம் திகதி சிம்ம ராசியில் பிரவேசித்து ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை இருப்பார் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயர்ச்சியின் பலனாக நீச்சபங்க ராஜயோகம், மத்ஸ்ய யோகம் விஷ்ணு யோகம் என்ற 3 யோகங்கள் உருவாகவுள்ளது. இதனால் இதன் தாக்கத்தினால் 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் மூன்றாம் வீட்டிற்குள் செவ்வாய் நுழைகிறார். இவரின் வருகையால் தைரியம், வீரம், என்பவை அதிகரித்து தான் இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் உங்கள் தொழில் சிறக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பார்ப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நினைத்திருந்தால் இந்த காலத்தில் வாங்கலாம். அரசாங்க வேலை வாய்ப்பு தேடி வரும் வீடுகளில் அமைதியான சூழல் நிலவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் நுழைகிறார். இதனால் சிலருக்கு ஆன்மீக பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதிப்பிரச்சினை இல்லாமல் போகும் செலவுகள் குறையும். வியாபாரத்தில் நல்ல இலாபம் பார்ப்பீர்கள். தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் இந்தக் காலத்தில் ஆரம்பித்தால் வெற்றி கிடைக்கும். வீடு, காணி வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
மீனம்
மீனராசிக்கு ஆறாம் வீட்டிற்கு செவ்வாய் நுழைகிறார். இதனால் இந்த காலம் உங்களுக்கு அதிக அதிஷ்டத்தை கொடுக்கும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் கைக் கூடும். தொழில் புரியும் இடங்களில் பதவி உயர்வு கிடைக்கும். பணி செய்யும் உங்கள் செயல்கள் பாராட்டப்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |