அடுத்தவரின் கணவரை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் ஜுலி! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் ஜுலி தற்போது நடித்துவரும் சீரியல் ஒன்றில் அடுத்தவரின் கணவரை தட்டிப் பறிக்க மோசமாக திட்டம் தீட்டியுள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் ஜுலி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்களின் வெறுப்பினை பெற்றுவந்த ஜுலி தற்போது மக்களுக்கு பிடித்த பிரபலமாக மாறி வருகின்றார்.
ஆம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீரத்தமிழச்சி என்று பெயர்பெற்ற ஜுலி பிக்பாஸில் கலந்து கொண்டு மக்கள் மனதினை வெல்ல நினைத்தார்.
ஆனால் உள்ளே அவரது உண்மையான குணத்தை அறிந்த மக்கள் அவரை வெறுத்தி ஒதுக்கினர். பின்பு சமூகவலைத்தளம் பக்கம் வராத ஜுலி பின்பு சில நிகழ்ச்சியில் கலந்து ரீ எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது படவாய்ப்புக்காக காத்திருக்கும் ஜுலி விதவிதமாக புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருவதுடன், தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் வழக்கறிஞராக நடித்து வருகின்றார்.
இதில் அடுத்தவரின் கணவர் மீது ஆசை கொண்ட ஜுலி, அவரை தட்டிப்பறிக்க பல கிரிமினல் வேலைகளை செய்து வருகின்றார்.