மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜூனியர் ரங்கராஜ்... அப்படி வளர விட மாட்டேன்: ஜாய் கிரிஸில்டாவின் பதிவு!
ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குழந்தையின் அழகிய போஸ் ஒன்றையும், அதே போல் போஸ் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் இணைத்த ஒரு பதிவை வெளியிட்டு, என் மகனை சமூகத்துக்கு ஒரு தவறான உதாரணமாக வளர நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.

மாதம்பட்டி ரங்கராஜ் அண்மையில், ஜாய் கிரிசில்டா மீது தனது நிறுவனத்துக்கு எதிராக அவதூறு பரப்புவதாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்காததன் காரணமாக ஜாய்க்கு ரங்கராஜ் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
கடந்த ஆக்டோபர் 15 விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என ரங்கராஜிக்கு மகளீர் ஆணையம் சம்மன் வழங்கியிருந்த நிலையில் ரங்கராஜ் முதல் மனைவியுடன் ஆஜராகியிருந்தார்.

மாதம்பட்டி ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டாதகவும் சில செய்தி தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது, ஜாய் கிறிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குழந்தையின் அழகிய போஸ் ஒன்றையும், அதே போல் போஸ் கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் இணைத்த ஒரு பதிவை வெளியிட்டு, என் மகனை சமூகத்துக்கு ஒரு தவறான உதாரணமாக வளர நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன் இணையத்தில் லைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
