சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்!
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அண்மைகாலமாக இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வரும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் ஏன் இவர்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
இரண்டு வருடங்களாக ரங்கராஜ் தன்னுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வரும் ரங்கராஜ் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி தான் தயார் செய்து வைத்த ஆடைகளை அணிந்துக்கொண்டு போய்ட்டு வராரேன் தங்கம்... என் சொல்லிவிட்டு போனதாகவும், அதன் பின்னர் வீட்டுக்கு வரவில்லை எனவும் ஜாய் கிரிஸில்டா குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவின் தொலைபேசி எண்ணை block செய்ததாக குறிப்பிடும் ஜாய் தான் வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பியுள்ளதுடன், தனக்கு பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது என்றும், குழந்தைக்கு யார் அப்பா என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று மீடியாவிடம் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |