மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி எல்லாம் தெரிஞ்சும் பேசாதது ஏன்? வெளுத்து வாங்கிய ஜாய்
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசிய காட்சிகள் அடங்கிய காணொளியை அவரே தனது சமூக ஊடக பக்கத்த்தில் பதிவிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ரங்கராஜ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
முதல் மனைவியுடன் வாழும் போதே அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது.
இந்த சர்சைக்கும் மத்தியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டதாகவும், கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் மாதம்பட்டி ரங்கராஜுன் இரண்டாவது மனைவி அண்மையில் பொலிஸ் புகார் கொடுத்தார்.
அதற்கு மாதம்பட்டியிடமிருந்து எந்தவித பதிலும் பெறப்படாத பட்டத்தில், தற்போது ஜாய் கிரிஸில்டா மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசிய காட்சிகள் அடங்கிய காணொளியை அவரே தனது சமூக ஊடக பக்கத்த்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
