முன்னணி பாடகிகளை தோற்கடித்த பிரபல நடிகை... காணொளியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா தனது அட்டகாசமான குரலில் பாடிய காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
புகழ் பெற்ற நடிகரும் மற்றும் கதாசிரியருமான லிவிங்ஸ்டன் தற்போது பிரபல ரிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வருகின்றார்.
இவரது மகள் ஜோவிடா, பூவே உனக்காக சீரியலில் நடித்து சமீபத்தில், கனத்த இதயத்துடன் இந்த சீரியலிலிருந்து வெளியேறினார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில், “நினைத்து நினைத்து பார்த்தேன்” என்ற பாடலை மி அருமையாக பாடியுள்ளார். இவரது குரல் பல முன்னணி பாடகிகளின் குரலையே மிஞ்சியுள்ளது.
இவரது குரலை கேட்ட ரசிகர்கள், குறித்த காணொளியினை அவதானித்து ஜோவிடாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.