மிக குறைந்த விலையில் பல அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் ஜியோ ஸ்மார்ட்போன்.. எப்போது வெளியீடு?
இந்தியாவின் மலிவான 4 ஜி ஸ்மார்ட்போனை, உருவாக்க கூகுள் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) 44-வது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM)நடைபெற்றது. அப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த மொபைல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கூட்டணியின் பதிப்பாக இருக்குமாம். மேலும், ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது ஒரு முழுமையான பிரத்யேக ஸ்மார்ட்போன் ஆகும்,
இது கூகுள் மற்றும் ஜியோ இரண்டிலிருந்தும் பயன்பாடுகளின் முழு தொகுப்பையும் பயன்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மூலம் பயனர்கள் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளின் முழு பயனையும் உபயோகிக்க முடியும்.
உலகளவில் மிகவும் மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும் என்பதும், செப்டம்பர் 10-ம் தேதி கடைகளுக்கு விற்பனைக்கு வரும் என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
Voice Assistant, திரையில் உள்ள எழுத்துகளை வாசிக்கு வசதி, மொழிபெயர்ப்பு மற்றும் AR Filter கொண்ட ஸ்மார்ட் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மோர்ட்போனில் உள்ளது.
இது 4ஜி, மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஜியோபோனின் கூடுதல் விவரக்குறிப்புகள், அத்துடன் ஜியோ ப்ரீபெய்ட் மற்றும் ஜியோ போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கான விலை மற்றும் சந்தா விருப்பங்கள், சிறப்பம்சங்கள் ஆகியவை வரும் வாரங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
