அதிரடியாக குறைக்கப்பட்ட ஜியோ கட்டணம்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்
ஏர்டெல், பிஎஸ்என்ல் நிறுவனத்தை விட ஜியோ நிறுவனம் கட்டணத்தை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியாக குறைந்த ஜியோ கட்டணம்
ஜியோ, ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை 26 சதவீதம் வரை அண்மையில் உயர்த்தியிருந்தது.
இதனால் ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் திட்டத்திற்கு மாறவும், அந்நிறுவனத்தின் திட்டத்துடன் விலையை ஒப்பிட்டும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை முழுமையாக வழங்காததால் பயனர்கள் பிஎஸ்என்எல்-க்கு மாறுவதற்கு சற்று யோசித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கையையும் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. இதனை சமாளிப்பதற்கு ஜியோ தனது மாதாந்திர திட்டத்தின் கட்டணத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதாவது ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.189 திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டமானது ஏர்டெலில் ரூ.199 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச குறுஞ்செய்தி, 4ஜி டேட்டா 2 ஜிபியும், இலவச அளவில்லா அழைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |