ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்... TRAI கொடுத்த எச்சரிக்கை
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(TRAI) விடுத்த எச்சரிக்கையால் ஜியோ நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதாவது 2ஜி சிம் கார்டை பயன்படுத்துபவர்களுக்கும், டேட்டாவை முன்னிலைப்படுத்தி ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருந்தது.
தற்போது வாய்ஸ், எஸ்எம்எஸ் வசதிகள் மட்டும் கொண்ட திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளது.
டிராயின் அறிவிப்பை அடுத்து தற்போது ஜியோ நிறுவனம் புதிய டேட்டா இல்லாத வாய்ஸ்-இன்லி திட்டத்தை கொண்டுவந்துள்ளதுடன், இதன் விலையையும் குறைத்துள்ளது.
ஜியோ
ஜியோ நிறுவனம் 84 நாட்களுக்கு 458 ரூபாய்க்கான ரீசார்ஜ் திட்டத்தினைக் கொடுத்துள்ளது. இத்துடன் 1000 எஸ்எம்எஸ்-களும் கிடைக்குமாம்.
இதே போன்று ஒரு வருடத்திற்கு ரூ. 1958 ரீசார்ஜ் திட்டத்தினை, தற்போது 1748ஆக ஜியோ மாற்றியுள்ளது. ஆனால் 365 நாட்களுக்கு மாறாக 336 நாட்கள் மட்டுமே வேலிடிட்டியைக் கொடுத்துள்ளது.
வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் திட்டங்கள்
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்களை கொண்டுவந்துள்ளன. வோடபோன் ஐடியா 1,460 ரூபாயில், 270 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை வைத்துள்ளது. இதில் வரம்பற்ற காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது, கூடுதல் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் உள்ளூர் எஸ்எம்எஸ் சேவைக்கு 1 ரூபாய் மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ் சேவைக்கு 1.50 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஏர்டெல் அதன் இரண்டு திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது. முன்னர் 499 ரூபாயில் 84 வேலிடிட்டி உடன் வந்த வாய்ஸ் மற்றும் எஸ்எம்ஸ் திட்டம் தற்போது 30 ரூபாய் குறைக்கப்பட்டு 469 ரூபாயாக மாறியுள்ளது. அதேபோல், 365 நாள்களுக்கான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் திட்டம் முன்னர் 1,959 ஆக இருந்தது. தற்போது 110 ரூபாய் குறைக்கப்பட்டு 1,849 ஆக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |