ரத்தன் டாடாவிற்கு மறுவாழ்வு கொடுத்த நகைக்கடக்காரர்! குவியும் வாழ்த்துக்கள்
டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்களுக்கு தலைவரான ரத்தன் டாடா சமீபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவருக்கு வைரங்கள் கொண்டு நகைக்கடக்காரர் அஞ்சலி செலுத்திய காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
ரத்தன் டாடா
டாடா 1991 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை இடைக்கால தலைவராகவும் பணியாற்றினார். அவரது முயற்சிகளுக்கு பரிசாக 2008ல் இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில் தற்போது 9ம் திகதி 86 வயதில் உயிர் துறந்தார். இதன் பின்னர் அவரின் உடல் வோர்லியில் உள்ள மின் தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது. ரத்தன் டாடாவின் மறைவு மக்களுககு ஒரு ஆழ்ந்த சோகத்தை கொடுத்தது.
பலரும் இவரின் இழப்பால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சூரத்தைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவர் மறைந்த ரத்தன் டாடாவின் உருவத்திற்கு 11000 வைரங்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளார்.
ரத்தன் டாடாவை மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு தகுதியான அஞ்சலியாக இந்த டாடாவின் படம் வரையப்பட்டுள்ளது. இது பதிவுபடுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |