பாக்கியலட்சமி சீரியலிலிருந்து திடீர் விலகல் ஏன்? சீரியலின் உண்மையை கணவருடன் போட்டுடைத்த ஜெனிபர்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து நடிகர் ஜெனிபர் திடீரென விலகியுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளிடம் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்த சீரியலில் நடிகை சுசித்ரா ஷெட்டி, பாக்கியலட்சுமியாக நடித்து வருகிறார். மேலும் அந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்து வந்தார்.
இவர் பல சீரியல்களில் நடித்து ரசிகர் பட்டாளத்தினை பெற்றவர். தற்போது சில காரணங்களால் குறித்த சீரியலிலிருந்து விலகினார்.
இதற்கான காரணம் தெரியாத ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் தனது கணவரோடு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் தான் ஏன் சீரியலிலிருந்து விலகினேன் என்பதை இருவரும் கூறியுள்ளனர். குறித்த காணொளியில் சீரியலில் இருந்து விலகுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது என்று கூறியுள்ளனர்.
ஒன்று பெர்சனல் காரணம் என்றும், அதை கூடிய சீக்கிரம் கூறுவோம் என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு காரணம் என்னவென்றால், இதுவரை ஜெனிபர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் கேரெக்டர் மாறபோவதாகவும், அதில் உடன் பாடில்லை என்றும் கூறியுள்ளனர்.
அதற்கு உதாரணமாக அதே சீரியலில் நடிக்கும் கோபி கேரக்டருக்கு வரும் நெகடிவ் கமெண்ட்ஸை அவர் எப்படி கையாள்கிறார் என்பதையும், அதற்காக அவர் வீடியோ வெளியிட்டு, இது கோபி கதாபாத்திரத்திற்காக நடிக்கிறேன் என்பதை கூறியதை சமீபத்தில் அவதானித்தோம்.
அதனால் இனிமேல் வேறுமாதிரி மாறப்போகும் ராதிகா கதாபாத்திரத்தில் நடிப்பத்தில் தயக்கமாக இருந்தது என்று கூறி சீரியலிலிருந்து விலகியதற்கு விளக்கமளித்துள்ளனர்.
மேலும் அந்த வீடியோவில்’இவ்ளோ நாள் என்ன சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் நன்றி. நான் திரும்பியும் கம் பேக் கொடுப்பேன் என்று ஜெனிபர் கூறியுள்ளார்.