ஜீவானந்தம் ஈஸ்வரி காதலை அறிந்த குணசேகரன்... பரபரப்பான தருணத்தில் அடுத்த என்ன நடக்கும்?
எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் ஈஸ்வரியை காதலித்த விடயம் குணசேகரனுக்கு தெரியவந்த நிலையில், அடுத்த என்ன நடக்கவிருக்கின்றது என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சி.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருந்துள்ளது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து சொத்தை மீட்க நினைத்த குணசேகரன் ஆட்களை அனுப்பி அவரை கொலை செய்ய நினைத்த நிலையில், அவருக்கு பதிலாக மனைவியை கொலை செய்துள்ளனர்.
தற்போது ஈஸ்வரியின் தந்தை குணசேகரன் வீட்டிற்கு வந்து ஜீவானந்தம் ஈஸ்வரியை திருமணம் செய்வதற்கு கேட்டார் என்று உண்மையை உடைத்துள்ளார்.
இதனால் குணசேகரன் கோபத்தின் உச்சத்தில் வாசலில் அமர்ந்து கொண்டிருக்கின்றார், ஈஸ்வரி ஜனனியுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகின்றார்.
குறித்த ப்ரொமோ காட்சி வெளியான நிலையில், அடுத்து நிகழப்போவது என்ன என்ற கேள்வி பார்வையாளர்களிடம் அதிகமாக எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |