ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை... மனைவி ஆர்த்தி கொடுத்த ஷாக்
நடிகர் ஜெயம் ரவியின் மனைவி விவாகரத்து விவகாரம் குறித்து அதிரடியான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிகள்
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் இந்த முடிவில் தனக்கு விருப்பம் இல்லாதது போன்று மனைவி ஆர்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு அடிமையாக தான் வாழ்ந்து வந்ததாகவும். கடந்த 15 ஆண்டுகளில் தனக்கென தனியாக ஒரு வங்கிக் கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்றும் தனது திரைப்பட விடயத்தில் மனைவியின் குடும்பத்தார் அதிக தலையீடு இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாக ஜெயம் ரவி கூறியிருந்தார்.
ஜெயம் ரவியின் மகன்களும் அவரது அம்மா ஆர்த்தியுடன் தான் இருக்கின்றார்களாம். இந்நிலையில் ஆர்த்தி அதிரடி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தியின் பதிவு
ஆர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி எழுந்துள்ள பொதுக் கருத்துகளை வைத்து பார்க்கும்போது, எனது மௌனம் பலவீனமோ அல்லது குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல என்பதை வலியுறுத்த வேண்டியது முக்கியமாகிறது.
நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்கு என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் விரும்புகிறேன். ஆனால் சட்ட அமைப்பு நீதியை நிலைநாட்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், எனது முந்தைய அறிக்கை பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து குறித்து பொதுவெளியில் வெளியிடப்பட்டதாக கூறினேன்.
எனது ஒப்புதல் இல்லாமல் இது பொதுவெளியில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றுதான் கூறினேன். நான் விவாகரத்து குறித்து எனக்கு தெரியாது என கூறவில்லை.
எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இன்று வரை அது மறுக்கப்படுகிறது.
நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன்.
எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் மட்டுமே உள்ளது. மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் கிருபையை நான் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |