ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டாரா? அவரே சொன்ன வார்த்தை
மனைவியை பிரிந்த ஜெயம் ரவி மிகவும் கஷ்டப்படுகிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவலாக உள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
விவாகரத்து சர்ச்சை
திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜெயம் ரவி கஷ்டப்படுகிறாரா?
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் வெளியில் வந்த ஜெயம் ரவி ஒரு முடிவுகளை பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
அதில், “ வாழ்க்கையில் நான் நானாக இருக்க விரும்புகிறேன். சில நேரங்களில் அப்படி இருப்பது கடினமாக இருக்கும்.
சிலர் அவர்களின் சுய நலத்திற்காக பெரிய சவால்களில் ஈடுபடுவார்கள். ஆனால் நான் முடிந்தவரை மற்றவர்கள் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். ஒருபோதும் உண்மையைச் சூழ்ச்சி செய்து மாற்ற முடியாது...” என பேசியிருக்கிறார்.
இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், “ மனைவியை பிரிந்து ஜெயம் ரவி கஷ்டப்படுகிறாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆர்த்தி- ரவி இருவரும் மீண்டும் இணையும் நாளை எண்ணி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |