பெயரை மாற்றி ரீ-என்றி கொடுக்கும் ஜெயம் ரவி.. அதிரடி மாற்றத்துடன் ரசிகர்களுக்கு காத்திருந்த 2 குட் நியூஸ்
நடிகர் ஜெயம் ரவி அவருடைய பெயரை “ரவி மோகன்” என மாற்றி விட்டதாகவும் இனி வரும் காலங்களில் ரவி மோகனாக பயணிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
ஜெயம் ரவிக்கும் அவரின் காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரியப்போவதாக முடிவெடுத்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரது சமூக வலைத்தளப்பக்கங்களிலும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
இதனை தொடர்ந்து, ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.
பெயர் மாற்றம்
இந்த நிலையில், இன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த நாள் தொடங்கி நான் ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும். என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்கும் மாறும்.
ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த நாள் தொடங்கி நான் ரவி மோகன் என்று அழைக்கப்பட விரும்புகிறேன். தமிழ் மக்கள் ஆசியுடன் என் ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று என்னை அழைக்குமாறு புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களது ஊக்கம் தான் எனக்கு எப்போதும் சிறப்பான உந்துதலாக இருந்து வந்துள்ளது. புதிய பயணத்திலும் உங்களின் தொடர்ச்சியான ஆதரவு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், புதிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |