ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடுமை! கதறிய ஜப்பானிய பெண்
ஹோலி பண்டிகையின் போது டெல்லியின் ஜப்பானிய பெண் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துன்புறுத்தப்பட்ட ஜப்பானிய பெண்
டெல்லியில் ஹோலி கொண்டாட்டத்தின் போது ஜப்பானிய பெண் ஒருவரை ஆண்கள் குழுவொன்று பிடித்து துன்புறுத்திய வீடியோ வெளியானது.
இதுகுறித்து போலீசார் தெரிவித்த தகவலின்படி, அந்த பெண் ஜப்பானிய சுற்றுலாப் பயணி ஆவார். அவர் தேசிய தலைநகரில் உள்ள பஹர்கஞ்சில் தங்கியிருந்தார். இப்போது வங்கதேசத்திற்குச் சென்றுவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த காணொளியில், ஒரு குழு ஆண்கள் ஒரு பெண் மீது வண்ணம் பூசுவதைக் காட்டியது. ஆண்களில் ஒருவர் அவள் தலையில் முட்டையை உடைப்பதையும் இது காட்டுகிறது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்....