தமிழ் பாடலுக்கு ஜப்பானிய பெண்களின் அட்டகாசமான நடனம்! லைக்ஸை குவிக்கும் காணொளி
விஷால் மற்றும் ஆர்யா நடித்த எனிமி திரைப்பட பாடலுக்கு ஜப்பானிய பெண்கள் இருவர் நடனமாடிய காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
தமிழ் பாடலுக்கு ஜப்பான் பெண் நடனம்
ஜப்பானை சேர்ந்த பெண் இருவர் பிரபல தமிழ் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மாயோ ஜப்பான் என்ற பெண் தமிழ் பாடல்களுக்கு நடனமாடி காணொளியினை வெளியிட்டுள்ளார்.
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த எனிமி படத்தில் இடம்பெற்றுள்ள ‘டும் டும்’ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.
எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த பாடல், ஏற்கனவே பயங்கர வெற்றியடைந்த நிலையில், மாயோ ஜப்பான், ஜாஸ்மின் தங்கோத்ராவுடன் ஒரே மாதிரியான ஆடை அணிந்து கலக்கலாக நடனமாடியுள்ளார்.
குறித்த காட்சி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் பெற்று வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.