தொப்பையை மளமளவென குறைக்க வேண்டுமா? இந்த ஜப்பானிய பானம் மட்டும் போதும்
ஜப்பானியர்கள் மன அழுத்தம் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கான சீக்ரெட் பானத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஜப்பானிய மக்கள் தொப்பை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் பாரம்பரிய பானம் தானாம். இதனை தினமும் தனது உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர்.
வெறும் இஞ்சி, எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பானத்தை பருகுவதால், பல நன்மைகளை பெறுவதுடன், நீண்ட ஆயுளுடனும் வாழ்கின்றனர்.
குறித்த பானத்தை பருகினால் இன்னும் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜப்பானிய பானத்தின் நன்மைகள்
வயிற்றுப் பகுதியில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைத்து தொப்பை இல்லாமல் பாதுகாக்கின்றது. இந்த தொப்பை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது மட்டுமின்றி பல ஆரோக்கிய பிரச்சனையையும் ஏற்படுத்துகின்றது. ஆதலால் இந்த பானத்தை பருகினால் வயிறு தொப்பை வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
கெட்ட கொழுப்பை கரைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இந்த பானம் உதவி செய்கின்றது. இந்த பானத்தில் சேர்க்கப்படும் இஞ்சி ரத்த ஓட்டததை அதிகரிப்பதுடன், இதிலுள்ள பொட்டாசியம், ரத்த குழாய்களின் அழுத்தத்தையும் குறைக்கின்றது. மேலும் இதயத்தையும் இந்த பானம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
செரிமான பிரச்சனை இருந்தாலும் தொப்பை விரைவில் ஏற்படும். இஞ்சி எலுமிச்சையில் இருக்கும் நொதிகள் செரிமானத்தை ஊக்குவிப்பதுடன், மலச்சிக்கல், அசிடிட்டி, வயிறு உப்புசம் பிரச்சனையையும் தடுக்கின்றது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ச்சி மண்டலத்தையும் வலுவாக்குகின்றது.
முகம் பொலிவிழந்து காணப்படுபவர்கள், முகப்பருவால் அவதிப்படுபவர்கள் இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அழகாகவும், பொலிவாகவும் வைக்கின்றது.
ஜப்பானிய நீரை தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு இன்ச் துண்டு இஞ்சியை தோல்நீக்கி, அதனை தட்டி ஒன்றரை கப் நீரில் போட்டு, சுமார் 6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் இதனை வடிகட்டி பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ளவும். ஒரு நாளில் இந்த பானத்தை எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.
ஆனால் காலை வெறும்வயிற்றில் குடித்தால் இதன் பலன் அதிகமாகவே இருக்கும். ஆம் செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதுடன், உடலின் மெட்டபாலிசம் மேம்பட்டு தேங்கியுள்ள கொழுப்புகளை எரித்து, தொப்பை இல்லாத வயி்ற்றை விரைவில் பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |