ஜூலையில் ஜப்பானை சுனாமி தாக்கும்: ஜப்பானின் பாபா வங்கா கணிப்பில் பீதியில் உலக நாடுகள்
ஜூலையில் பெரிய சுனாமி ஜப்பானை தாக்கும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா வங்கா கணிப்பு
உலகில் என்ன நடக்கப்போகிறது என்பதை சிலர் முன்கூட்டியே கணித்து வைத்துள்ளனர். அதில் பாபா வங்கா எனப்படும் பல்கேரியாவின் வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா என்போரும் முதன்மையானவர் தான்.

1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும் கிழக்கு ஐரோப்பாவில் அவரது தெளிவுத்திறன் மற்றும் முன்னறிவிப்புத் திறன்களுக்காக அவர் பரவலாக அறியப்பட்டார்.
அவர் பல தசாப்தங்களுக்கு முன்பே கணிப்புகளைச் செய்துள்ளார். இவர் கணித்த 2001 அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல், கொரோனோ வைரஸ் ஆகியவை உண்மையில் நடந்துள்ளன.
இவரை போல தான் தற்போது ஜப்பானின் பாபா வங்கா என்றழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண் வரும் ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என கணித்துள்ளார் இது உலக மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பெண் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி உலகில் நடக்க இருப்பதை விசித்திரமான முறையில் முன்கூட்டியே கணித்து வருகிறார்.
மங்கு கலை ஓவியரான ரையோ தத்சுகி, தான் கனவுகளின் காணும் சம்பவங்களை ஓவியமாக வரைந்து வருகிறார். இவர் வரைந்ந கனவுகள் அப்படியெ நடப்பதாக பலரும் கூறுகின்றனர்.
இவர் வரைந்து நடந்த சம்பவங்கள் 1991 ஃபிரெட்டி மெர்குரியின் மரணம், 1995 கோபே நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டு ஜப்பானின் சுனாமி போன்றவற்றை ஆகும்.

இந்த நிலையில் இவர் தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ரையோ தத்சுகி ஓவியம் வரைந்திருக்கிறார்.
அதாவது ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக மிக மோசமான சுனாமி ஏற்படலாம் எனவும்
ஜப்பான் மட்டுமின்றி தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சுனாமியால் பாதிக்கப்படுவதை ரையோ தத்சுகி ஓவியமாக வரைந்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        