ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான சீக்ரெட் என்ன தெரியுமா? ஆச்சரியப்படும் விடயம்
ஜப்பான் நாட்டு மக்களின் நீண்ட ஆயுளுக்கு அவர்கள் மேற்கொள்ளும் சில சீக்ரெட்டான விடயத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜப்பான் மக்கள்
பொதுவாக ஜப்பான் நாட்டு மக்கள் வயதானாலும் இளமையாக இருப்பதுடன், 100 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழவும் செய்கின்றனர்.
இவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரியாமல் தான் இருக்கும். இவர்களின் வாழ்க்கை முறை, உணவு முறையில் முழு கவனத்தை செலுத்துகின்றனர்.

மேலும் இவர்கள் உடல் சார்ந்த பிரச்சனைகள் எதையும் எளிதில் மேற்கொள்வது இல்லை. ஆரோக்கியமாக வாழ்வதற்கான முயற்சிகளை சரியாக எடுத்துக்கொண்டு, அதனை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கவும் செய்கின்றனர்.
ஜப்பானியர்கள் நீண்ட வருடங்கள் உயிர் வாழ்வதற்கு காரணமான சில வாழ்வியல் முறைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட ஆயுளுக்கான காரணம்
ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் உணவு உண்பதில் கூட கட்டுப்பாடு வைத்துள்ளனர். அதாவது இவர்கள் குறைவாகவே சாப்பிடுவார்கள். வயிறு நிரம்ப சாப்பிடாமல் 80 சதவீதம் வயிறு நிறைந்ததும் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வார்களாம்.
இவர்களின் சமநிலையான டயட்டும் இவர்களின் ஆரோக்கியமான நீண்ட வருட வாழ்க்கைக்கு உதவியாக இருக்கின்றது. அதாவது ஜப்பானியர்கள் அதிக காய்கறிகள், அரிசி உணவு, டோஃபு, மீன், கடல்பாசி, நொதித்த உணவுகள் என சமநிலையில் உணவை எடுத்துக் கொள்கின்றனர்.

அதே போன்று சாப்பிட்டவுடன் சோம்பேறியாக அமர்ந்து கொள்வது, தூங்குவது இந்த பழக்கத்தினை இவர்கள் முற்றிலும் தவிர்க்கின்றனர். தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு உடம்பை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கின்றனர்.

மேலும் வயதாகும் போது சமூகத்தை விலகி தனிமையாக இருப்பது கிடையாதாம். அதற்கு மாறாக சமூகத்துடன் தொடர்பில் இருக்கின்றனர். ரீயூனியன், குடும்ப விழாக்கள், கொண்டாட்டம் என அனைத்திலும் கலந்து கொண்டு மன ரீதியாகவும் இவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.

வாழும் வாழ்க்கைக்கு என சில குறிக்கோள் வைத்துள்ளதுடன், அதன்படி வாழ்வது இவர்களின் முக்கியமான செயல்களில் ஒன்றாக இருக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |