ஜனநாயகன் திரைப்பட லீக் - வசமாக சிக்கிய முக்கிய குற்றவாளி... யார் தெரியுமா?
ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் இணையத்தில் எப்படி அதற்கான முக்கிய குற்வாளி யார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஜனநாயகன்
ஏப்ரல் 10ம் தேதி ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. முதலில் 5 நிமிட காட்சி என சொல்லப்பட்ட நிலையில் தற்போது3 மணி நேரம் முழுவதுமாக லீக் ஆகி உள்ளது.
இந்த நிலையில் விஜயின் ஜனநாயன் படத்தை யார் லீக் செய்திருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் நடிகர் விஜயின் 69வது படம் உருவாக்கபட்டது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, நரேன், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இந்த படம் இந்த ஆண்டின் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் பல பிரச்சனை இப்படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்ததால் வெளியாகவில்லை.
இதனால் பட வெளியீடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஜனநாயகன் படம் மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

முக்கிய குற்றவாளி
இப்படியான இருக்க ஏப்ரல் 10ம் தேதி படிபடியாக முழு படமும் வெளியானது. இது தொடர்பில் உடனடியாக பட நிறுவனம் தரப்பில் சைபர் கிரைம் போலீஸில் புகாரளிக்கப்பட்டது.
அதன்படி போலீஸ் விசாரணை செய்து மொத்தம் 6 பேரை தற்காலிகமாக கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்கள், டெலிகிராம் செயலி மூலம் படத்தை வெளியிட்டவர்கள் தகவல்கள் தற்போது சேகரிக்கபட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் உதவி எடிட்டர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் சேர்த்து மேலும் 2 பேர் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.