கன்ஃபெக்ஷன் ரூமுக்கு முதல் நபராக சென்ற இலங்கை பெண் ஜனனி! சூடுப்பிடிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் வீட்டுக்குள் 20 போட்டியாளர்களும் சென்றுவிட்ட நிலையில், முதல் ஆளாக கன்ஃபெக்ஷன் ரூம் சென்றவர் ஜனனி தான்.
நேற்றிரவே கன்ஃபெக்ஷன் ரூம் போன ஜனனி, பிக் பாஸின் உத்தரவை போட்டியாளர்களிடம் தனது கொஞ்சும் தமிழில் வரிசைப்படுத்தி கூறினார்.
இந்நிலையில், ஹோம்லி லுக்கில் ரொம்பவே க்யூட்டாக இருக்கும் ஜனனிக்கு ரசிகர்களிடம் நொடிக்கு நொடி ஆதரவு கூடி வருகிறது.

இதெல்லாம் என்ன பிரமாதம் என நெட்டிசன்கள் சிலர் ஜனனி ஆர்மி பேஜ்ஜை தொடங்கி ஆள் சேர்க்க தொடங்கி விட்டனர்.
பிக் பாஸ் என்றாலே ஆர்மிகளுக்கு பஞ்சம் இருக்காது.
ஓவியா ஆர்மி, லொஸ்லியா ஆர்மி என தொடங்கிய இந்த வரிசை, இந்த சீசனில் ஜனனி ஆர்மி என வந்துள்ளது.
Mallipoo ?#BiggBossTamil #BiggBoss #BiggBossTamil6 #janany #JananyArmy pic.twitter.com/rRKKhbDN8q
— Janany ❁ (@imjananykj) October 9, 2022
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய ஒரேநாளில் ஜனனிக்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஆதரவு, போட்டியை களைக்கட்ட வைத்துள்ளது.
இன்னொரு பக்கம் ஜிபி முத்துவின் அட்ராசிட்டிகள் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு செம்ம எண்டர்டெயின்மென்ட்டாக அமைந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது முதலே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு சரியான கண்டெண்ட்டுகள் கிடைத்து வருகின்றன. இன்னும் போகப் போக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.