சின்ன பொண்ணுன்னு சொல்லியே விளையாட விடாம பண்ணிட்டாங்க! இலங்கை பெண் ஜனனியின் ஆதங்கம்
பிக்பாஸ் வீட்டில் கடந்தவாரம் வெளியேறிய இலங்கை பெண் ஜனனி தன்னுடைய ரசிக்கர்களுக்காக இணையத்தில் பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.
ஜனனி
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்த இவருக்கு தற்போது 21 வயது தான் ஆகிறது.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இலங்கை மக்களின் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார்.
இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும், ஊடகத்துறையிலும் பணியாற்றி வந்தார்.
பிக்பாஸ்
ஜனனிக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பேர் கிடைத்தது. பிக் பாஸ் தொடங்கிய போது இவருக்கு ஆர்மி எல்லாம் ரசிகர்கள் தொடங்கினர்.
போக போக அவர் வெறுப்புக்களையும் சம்பாதித்து கொண்டார்.
எவிக்சன்
கிட்டத்தட்ட 70 நாட்கள் முடிவடைந்த நிலையில் கடைசி வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்த ஜனனிக்கு திடீர் வெளியேற்றம் அவரை மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்தது.
போட்டியாளர்கள் பற்றிய கருத்து
இதன்பின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜனனி நிகழ்ச்சியை பற்றியும் நிகழ்ச்சியில் இருந்த சக போட்டியாளர்களை பற்றியும் பல்வேறு தகவல்களை பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜனனி பிக்பாஸ் வீட்டை பற்றியும் சக போட்டியாளர்கள் பற்றியும் நமது ஊடகத்திற்கு போட்டியொன்றை வழங்கியுள்ளார். இது குறித்து தெரிந்து கொள்வோம்.