சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் - திரிஷா என்ன பேசுவார்கள்? பிக்பாஸ் ஜனனி சொன்ன சீக்ரெட்
நடிகை த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் என்ன பேசுவார்கள் என்ற சீக்ரெட்டை பிக் பாஸ் ஜனனி கூறியுள்ளார்.
முதலமைச்சர் விஜய், த்ரிஷா
முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் நேற்று வெளியாகி ஒட்டுமொத்த மக்களையும் குஷியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.
இந்நிலையில் பிக் பாஸ் ஜனனி அளித்துள்ள பேட்டி ஒன்றில், லியோ படத்தில் நடிக்கும் போது தன்னுடைய அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய், த்ரிஷா என்ன பேசுவார்கள் என்பதையும் கூறியுள்ளார்.
ஜனனி கூறுகையில், ஆஹா... இரண்டு பேருமே ஜாலியாக பேசுவாங்க... பெரும்பாலான நேரங்கள் எனக்கு வரும் சீன்களுக்கெல்லாம் நான் நோட் பண்ணி இருக்கிறதுனால, நான் ஏதாவது சொன்னால் சாருக்கு புரியும்.
ஆனால் த்ரிஷா மேம்க்கு கொஞ்சம் கம்மியா புரியும். அப்போ அவங்க என்ன சொன்னாங்க? என்று விஜய் சாரிடம் கேட்பார்கள். சார் சொல்வாங்க... படப்பிடிப்பு தளத்தில் அவங்க கொடுக்கிற ரியாக்ஷன் எல்லாம் அழகா இருக்கும்.
விஜய் சார், திரிஷா மேம் ரெண்டு பேரும் எப்போ செட்டுக்கு வந்தாலும் அந்த இடமே ஒரு வேற மாதிரியான எனர்ஜியா மாறிரும். அவங்க ஹாய் அப்படின்னு சொல்லி பேசினாலே நமக்கும் அந்த எனர்ஜி வந்துரும்.
இருவரும் தனியா பேசி பார்த்தது இல்லை... எல்லாரும் ஒன்றாக இருக்கும் போது தான் பேசுவாங்க... தனியாக பேசுறதே குறைவு தான்.

ஆனால் ஏதாவது சார் சொன்னா எங்ககிட்ட கேட்பாங்க... இப்ப சார் என்கூட இருந்து பேசி ஏதாவது ஜாலியா பேசிட்டு இருந்தா, "என்ன சார் சொல்றாரு?" அந்த மாதிரி ஜாலியா கேப்பாங்க.
அவங்களோட சீன் வரும்போது நடிச்சு, அந்த சீன் ரிலேட்டிவா ஏதாவது பேசுவாங்க. கேம் ஏதாவது இருந்ததா என்ற கேள்விக்கு, அதுக்கெல்லாம் டைம் கிடைக்கவில்லை என்று சிரித்துக் கொண்டு ஜனனி பதில் அளித்துள்ளார். ஏன்னா எல்லா சீனும் த்ரில் த்ரிலாதான் போயிட்டு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |