விஜய் மனைவியுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபலம்.. அவரே சொன்ன ஷாக் News- விமர்சித்த பயில்வான்
நடிகர் விஜய்யின் மனைவி பற்றிய வதந்திகளுக்கு நடிகர் ஜெய் ஆகாஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜெய் ஆகாஷ்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜெய் ஆகாஷ்.
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
காலங்கள் செல்லச் செல்ல ஜெய் ஆகாஷிற்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது.
இதன் பின்னர் ஜெய் ஆகாஷ் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.
விஜய் மனைவியுடன் கிசுகிசு
இதனிடையே ஆகாஷுக்கும் பிரபல நடிகரின் மனைவிக்கும் இடையே காதல் இருந்ததாக இணையத்தில் செய்தி வெளியாகியது.
இந்த நிலையில் திரைப்பட விழா ஜெய் ஆகாஷ், “ நான் ஒரு பெண்ணை காதலித்தது உண்மைதான். அந்த பெண் பணத்திற்காக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
என்னுடைய காதலி நல்லவள். அவர் செய்தவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. என்னுடைய காதலும் உண்மை, நான் காதலித்த பெண்ணும் உண்மை..” என பேசியிருந்தார்.
இவர் பேசிய அந்த பெண் விஜய் மனைவி சங்கீதா தான் என பலரும் கிசுகிசு வந்தார்கள்.
பயில்வான் பதிலடிக் கொடுத்த ஆகாஷ்
அந்த சமயத்தில் ப்ரோமோஷன் விழாவில் பேசிய பயில்வான், “ ஜெய் ஆகாஷ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவரைப் பற்றி ஒரு கிசுகிசு வெளியிட்டேன். இவரும் இன்னொரு பெண்ணும் காதலில் இருந்து வந்திருந்தார்கள்.
அந்த பெண் பிரபல நடிகை தான். நான் கூறியது உண்மை தான்...” என பேசியிருந்தார்.
அப்போது உடனே ஜெய் ஆகாஷ், “ இது பொய்யான தகவல்..” என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |