யாழில் சிவன் ஆலயத்தில் இருக்கும் சமாதி தெரியுமா?
யாழ். மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சிவபெருமானின் தியான திருவுருவச் சிலை
ஜம்புகோளப்பட்டின விகாரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயம் காணப்பட்டது.
இங்குதான், 21 அடி உயரமான தியான நிலையில் உள்ள சிவபெருமானின் சிலை காணப்படுகின்றது.
மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் அரவத்தின் மேலே சிவபெருமான் வீற்றிருப்பதுபோல் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சம்புநாத ஈச்சரத்தில் சைவ மகா சபையினால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற சிவபெருமானின் தியான திருவுருவம் தற்போது மீளவும் வர்ணம் தீட்டப்பெற்று 2023.12.01 திருக்குடமுழுக்கு செய்யப்பெற்றது.
சிவபெருமானின் சிலைக்கு அருகில் ஆலயம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இவ் ஆலயத்தை நரசிங்க சித்தர் சுவாமி கவனித்து வந்தார்.
அவரின் பின்னர் அவரது துணைவியார் இவ் ஆலயத்தை கவனித்து வருகின்றார். நரசிங்கசித்தரின் சமாதியும் ஆலயவளாகத்தின் உள்ளே காணப்படுகின்றது. அவர் உயிர்பிரியும் தருவாயில் அவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இச் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |