யாழில் சுனாமி தாக்கத்துக்குள்ளான மணற்காடு கடற்கரை... தற்போதைய நிலை என்ன?
பொதுவாகவே யாழ்ப்பாணத்தை பொருத்தமட்டில் நெய்தல் நிலத்துக்கென ஒரு தனி சிறப்பு காணப்படுகின்றது. காடுகள் என்றால் மரம், செடி, கொடிகள் நிறைந்திருக்கும். ஆனால் இது மணலாலான காடு.
யாழ் குடா நாட்டின் வடமுறையின் தென்கிழக்கே எழில் வரப்பு மிக்க வயல்வெளிகளையும் கடலையும் கொண்டுள்ள வடமராட்சியானது மருத நிலமும் நெய்தல் நிலமும் ஒருங்கே சேரப்பெற்றது.
இது மணற்காடு கிராம அலுவலக விரிவாக்கம். தொண்டிக்குளம் வரை 18 கிராம அலுவலக விரிவுகளை உள்ளடக்கியது. வடமராட்சியானது வடமேற்கே வடமராட்சி வடக்கு பிரதேசுதான விரிவுகளையும் வடகிழக்கே சமுத்திரத்தையும் தென்கிழக்கே முல்லைத்தீவு மாவட்டத்தையும் தென்மேற்கே பச்சிளப்பள்ளி பிரதேச ரக பிரிவு மற்றும் தென்மராட்சி பிரதேச ரக பிரிவு ஆகியவற்றை எல்லைகளாக கொண்டது.
வடமராட்சி பிரதேச ரக பிரிவில் அடங்கும் கிராமங்களில் மணற்காடு முக்கியமானது. இது பறவைகளின் சொர்க பூமியாகவும், மணல் மண் வளம் நிறைந்த பகுதியாகவும் வரலாற்று காலத்தில் பூர்விக குடிகளான நாகர்கள் வாழ்ந்த பிரேதசமாக சிறப்பு பெறுகிறது. இதன் வரலாற்று சிறப்பு மற்றும் புவியல் சிறப்பு தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
