இந்த 2 ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கின்றதா? ஒரே இரவில் லட்சாதிபதியாகலாம்
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய நோட்கள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
இவற்றை விற்பனை செய்ய நீங்கள் எங்கும் அலையாமல், அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக விற்கலாம். இந்தியா மார்ட், காயின் பஜார், குயிக்கர், பின்ரெஸ்ட், ஓஎல்எக்ஸ் போன்ற வலைதளங்களில் இதனை விற்பனை செய்ய முடியும்.
அரிய 2 ரூபாய் பழைய நோட்டு (Old Rupee Notes) உங்களிடன் இருந்தால் ஆன்லைன் ஏலத்தில் விற்கலாம். ஆனால் அது மிக அரிய நோட்டாக இருந்தால் மட்டுமே அதிக பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் யுக்தியை அறிந்து கொள்வோம்.
பல ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை இந்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நோட்டுகளில் 1,2,5 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கும். இவற்றில் பல சிறப்புகள் கொண்ட பழைய நோட்டுகள் ஆன்லைன் தளங்களில் ஏலம் விடப்படும். இந்த பழைய நோட்டுகளை வாங்க பலர் அர்வம் காட்டுவதால் அதிக டிமாண்ட் உள்ளது.
சிறப்பு அம்சமாக இந்த 2 ரூபாய் நோட்டில் 786 என்ற எண் இருக்க வேண்டும். 786 எண் கொண்ட (786 Number) நோட்டை பெற மக்கள் நல்ல விலை கொடுக்க தயாராக உள்ளனர். ஏனெனில் 786 என்ற எண் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இந்த நோட்டை வாங்க மக்கள் தயாராகிறார்கள். இது தவிர, இந்த நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும், அதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் மன்மோகன் சிங்கின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
அதை விற்க நீங்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைன் தளமான ஈபே (Ebay) மற்றும் கிளிக் இந்தியா (Click India) போன்ற தளங்களில் நீங்கள் அதை விற்கலாம். இந்த தளத்தில் மக்கள் அதிர்ஷ்ட ரூபாய் நோட்டுகளை கிடைக்குமா என தேடுகிறார்கள். Click India தளத்தில் வாட்ஸ்அப் மூலமாகவும் ரூபாய் நோட்டுகளை விற்கலாம்.