தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து மீண்ட முதல் நாடு; கொண்டாட்டத்தில் மக்கள்! எப்படி தெரியுமா?
உலகமே மீண்டும் கொரோனா வைரஸின் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மேலும், இதனால் பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்த நிலையில், கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் செலுத்த அரசு தீவிர முயற்ச்சியை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி மூலம் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக இஸ்ரேல் நாடு அறிவித்துள்ளது. மேலும், அந்நாட்டில் உள்ள மக்கள் முகக் கவசங்கள் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிவிட்டனர்.
இஸ்ரேல் நாட்டில் உள்ள பொதுமக்களில் 68 சதவீத மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, முகக்கவசம் உள்ளிட்ட எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இஸ்ரேல் மக்கள் தெருக்களில் நடமாடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொரோனாவில் இருந்து மீண்ட முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.