நடிகர் சிம்புவுக்கு சொகுசு காரை பரிசளித்த பிரபலம்....இத்தனை கோடி பெறுமதியா?
வெந்து தணிந்தது காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருவதால் படக்குழு மிகவும் உற்சாகமடைந்துள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.
இப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக உள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நேற்று அப்படத்தின் சக்சஸ் மீட்டை சென்னையில் கொண்டாடினார்.
அதில் இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகர் சிம்புவுக்கு பரிசுகளை வழங்கினார்.
அதன்படி கவுதம் மேனனுக்கு பைக் மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புல்லட் ஒன்றை பரிசாக வழங்கினார்.
இதையெல்லாம் விட சிம்புவுக்கு அவர் கொடுத்த பரிசு தான் வேறலெவல். அவருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார் ஆன ‘Toyota vellfire’ எனும் காரை பரிசாக வழங்கி இருக்கிறார்.
அந்த காரின் விலை கிட்டத்தட்ட ரூ.1 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.