அம்பானியை மிஞ்சிய இஷா அம்பானி கணவரின் சொத்து மதிப்பு இவ்வளவா? முழுவிபரம் இதோ
இஷா அம்பானியின் கணவர் ஆனந்த் பிரமலின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனந்த் பிரமல் சொத்து மதிப்பு
ஆனந்த் பிரமல் அக்டோபர் 25, 1985 இல் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் MBA பட்டம் பெற்றார்.
இதன் பின்னர் 100 ஆண்டுகள் பழமையான இந்திய வணிகர் சேம்பர்ஸ் இளைஞர் பிரிவின் இளைய தலைவராக பணியாற்றினார். 2017 இல் "ஹுருன் ரியல் எஸ்டேட் யூனிகார்ன் ஆஃப் தி இயர்" விருதைப் பெற்றார்.
இவர் தற்போது ஆனந்த் பிரமல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பிரமல், நிறுவனத்தின் நிதிச் சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் பிரிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
இவரிடம் SME கடன் மற்றும் கட்டுமான நிதி போன்ற முக்கிய பிரிவுகளை அவர் மேற்பார்வையிடுகிறார். ஆனந்த் குழுமத்தின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் நிதி மற்றும் மாற்று முதலீடுகள் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் அதன் பல்வகைப்படுத்தலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இது தவிர ரியாலிட்டிக்கு தலைமை தாங்குகிறார். இது மும்பை முழுவதும் உள்ள மகாலக்ஷ்மி, பைகுல்லா, தானே, முலுண்ட், குர்லா, லோயர் பரேல் மற்றும் வொர்லி ஆகிய இடங்களில் திட்டங்களைக் கொண்ட ஒரு பெரிய ரியல் எஸ்டேட் வணிகமாகும்.
இவ்வளவு இருந்தாலும் இவரின் நிகர மதிப்பு எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவரது தந்தையின் நிகர மதிப்பு சுமார் 310 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனப்படுகின்றது.
இது இந்திய மதிப்பு படி ₹25,596 கோடி எனப்படுகின்றது. ஆனந்த் பிரமல் இஷா அம்பானியை திருமணம் செய்ததன் பின்னர் ஐந்து மாடி மாளிகையான குலிதாவுக்கு குடிபெயர்ந்தார். இந்த மாளிகை 452 கோடிகள் மதிப்புடையதாம். இதனுடன் இவரின் சொகுசு கார்கள் சேகரிப்பு பல கொடியாக காணப்படகின்றது.
அதன்படி ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் - சுமார் ₹1 கோடி Mercedes Maybach 3600 - ₹10 கோடி மதிப்பு ஜாகுவார் எஃப்-பேஸ் - ₹70 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. Mercedes Benz S350D - விலை ₹1.4 கோடி ஆஸ்டன் மார்ட்டின் ரேபிட் - ₹3.29 கோடி லம்போர்கினி கல்லார்டோ - மதிப்பு ₹3.06 கோடி என உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |