அமெரிக்க வீட்டை Hollywood ஜோடிக்கு விற்ற இஷா அம்பானி- எவ்வளவு வாங்கினார் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது ஆடம்பர மாளிகையை பிரபல ஹாலிவுட் தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இஷா அம்பானி விற்ற வீட்டின் பெறுமதி
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, 15,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்திருக்கிறார்.
நாட்டின் மிக விலையுயர்ந்த குடியிருப்பாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டிலியாவின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் ஆடம்பர வீடுகள், பங்களாக்கள் மற்றும் சொத்துக்கள் இருக்கின்றன.
இப்படியொரு சமயத்தில் முகேஷ் அம்பானி மகள்- இஷா அம்பானி பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் உலகம் முழுவதும் இருக்கின்றன.
அந்த வகையில், இஷா அம்பானிக்கு சொந்தமான ஆடம்பர மாளிகை ஒன்று அமெரிக்கா- Los Angeles-ல் என்ற நகரில் இருந்துள்ளது.
இதனை அவர் பிரபல ஹாலிவுட் ஜோடியான பென் அஃப்லெக் மற்றும் ஜெனிபர் லோபஸுக்கு விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாளிகையின் பரிவர்த்தனை 494 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
வீட்டின் சிறப்புக்கள்
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது கர்ப்ப காலத்தில் கணிசமான நேரத்தை இந்த ஆடம்பர வீட்டில் தான் இஷா அம்பானி செலவு செய்தாராம். இதனால் இந்த மாளிகை அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் முக்கியமானது.
இஷா அம்பானி இந்த வீட்டில் இருந்த போது நீதா அம்பானியும் உடன் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.
பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 5.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையானது, 155-அடி குளம், உட்புற மைதானம், சலூன், ஜிம்னாசியம், ஸ்பாக்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வசதிகளைக் கொண்டுள்ளது.
அத்துடன் 12 படுக்கையறைகள் மற்றும் 24 குளியலறைகளுடன் இந்த எஸ்டேட் ஒரு வெளிப்புற பொழுதுபோக்கு இடங்கள், நவீன சமையலறை மற்றும் பரந்த புல்வெளிகள் ஆகிய இந்த வீட்டில் உள்ளன என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
