Toilet-ல் Smart Phone பயன்படுத்துவீங்களா?அப்போ இந்த நோய் வரும்- ஜாக்கிரதை
பொதுவாக தற்போது இருக்கும் அவசர வாழ்க்கையில் செல்போன் நமது உறுப்புகளில் ஒன்றாக மாறி வருகின்றது.
ஸ்மார்ட் ஃபோன்கள் உண்மையில் நமக்கு உபயோகமான பொருளாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் இருந்து வருகின்றது. ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வில் செல்போன்கள் பாவனை குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டாய்லெட் சீட் அதாவது கழிப்பறை இருக்கைகளுடன் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோனை ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், டாய்லெட் சீட்களில் இருப்பதை விட அதிக அளவு பாக்டீரியாக்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் இருப்பதாக கூறப்படுகின்றது. மனிதர்களுக்கு தொற்று நோயை ஏற்படுத்த கூடிய Pseudomonas aeruginosa என்ற பாக்டீரியாக்கள் செல்போன்களில் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த பாக்டீரியாக்கள் கரப்பான் பூச்சியின் எச்சத்திலும் கூட இருக்கலாம் என கூறப்படுகின்றது.
மேலும், உரிய நேரத்திற்கு ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கும் பாக்டீரியாக்களை சுத்தம் செய்யாவிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட கூடும். அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடிமையாகியவர்கள் இது கடுமையான ஆபத்தை விளைவிக்கலாம்.
ஆரோக்கிய குறைபாடுகள்
தற்போது இருக்கும் நவீனமயமாக்கலினால் அதிகமாக நாம் சாதனங்களுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த சமயத்தில் சாதனங்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாவிட்டால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம்.
NIH-ன் முந்தைய ஆய்வில், சுமார் 43% மருத்துவ மாணவர்கள் கழிப்பறையில் இருக்கும் போது கூட மொபைல் போன்களை பயன்படுத்துகிறார்களாம். அதிலும் 23% மொபைல் பாவனையாளர்கள் மட்டுமே சாதனங்களில் இருக்கும் கிருமிகளை முறையாக நீக்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.
டாய்லெட் பவுல்களில் இருக்கும் கிருமிகளை விட பத்து மடங்கு பயங்கரமான கிருமிகள் ஸ்மார்ட் ஃபோன்களில் இருக்கின்றது. இது நாளடைவில் சிறுநீர்ப்பை தொற்று மற்றும் பிற செரிமான அமைப்பு சிக்கல்கள் வரை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் தூங்குவதற்கு செல்லும் போது கூட தொலைபேசியை பக்கத்தில் வைத்து கொள்கிறார்கள். சுமார் 74% மக்கள் இதனை தவிர்க்க முடியாது என்கிறார்கள். இந்த சமயத்தில் செல்போனில் இருக்கும் கிருமிகள் அவர்களின் ஆழ்ந்த தூக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் குவிந்து சருமம் மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம். சிலருக்கு சுவாச பிரச்சினைகள் கூட வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |