கோவை பயணத்தின் போது அரசியல் வருகை குறித்து கேள்வி… த்ரிஷாவின் ரியாக்ஷன் வைரல்!
விஜய் மற்றும் த்ரிஷா தொடர்பான செய்திகள் ஏற்கெனவே பேசுபொருளாக இருந்த நிலையில், தேர்தலுக்கு முன்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொண்டது, திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.
இதற்கிடையில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்குத் தாக்கல் செய்த தகவல்களும் இந்த விவகாரம் குறித்த விவாதங்களை மேலும் அதிகரித்தன.

பின்னர், சங்கீதா விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த சர்ச்சைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது.
இவ்வாறான சூழலில், தற்போது நடிகை த்ரிஷாவிடம் எழுப்பப்பட்ட அரசியல் தொடர்பான கேள்வி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவைக்கு சென்ற த்ரிஷாவிடம் எழுப்பப்பட்ட கேள்வி!
நடிகை த்ரிஷா, கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவைக்குச் சென்றிருந்தார். குறித்த புகைப்படங்களும் கூட இணையத்தில் படு வைரலானது.
குறித்த கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக கோவை சென்ற போது, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரைச் செய்தியாளர்கள் சந்தித்தபோது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அப்போது, “எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?” என செய்தியாளர்கள் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பினர்.இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், த்ரிஷா எந்தவிதமான வாய்மொழிப் பதிலையும் அளிக்கவில்லை. மாறாக, புன்னகையை மட்டும் வெளிப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில வைரலாகி வருகின்றது.
அரசியலுக்கு வருவீர்களா? - திரிஷா கொடுத்த ரியாக்ஷன் - TV9 #tv9tamil #tamilnadunews #tamilNews #news #tv9 #Trisha #TrishaKrishnan #TrishaPolitics #TamilCinema #Kollywood #ActorTrisha #PoliticalEntry #TrishaReaction #Vijay #TVK #TamilNaduPolitics #CelebrityNews https://t.co/yxwxM6wOVT
— TV9 Tamil (@TV9Tamil) October 24, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |