விஜய்–த்ரிஷா பிறந்தநாள் புகைப்படம்: AI படமா? சர்ச்சையால் இணையத்தில் பரபரப்பு!
விஜய் பிறந்தநாளில் நடிகை த்ரிஷா பகிர்ந்த ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் பெரிய சர்ச்சையையும், அதே நேரத்தில் ஏஐ புகைப்படம் என்ற புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, கேக் வெட்டும் தருணத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “To the person who makes it all worth it...” என்ற கேப்ஷனுடன் வாழ்த்தும் தெரிவித்திருந்தார். அந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவியது.

ஆனால் அதே வேகத்தில் விமர்சனங்களும், சந்தேகங்களும் கிளம்பத் தொடங்கின. சிலர் இதை சாதாரண பிறந்த நாள் வாழ்த்து அல்ல என்று கூற, குறிப்பாக விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரைச் சுற்றி அதிகரித்துள்ள கவனத்தின் பின்னணியில், இப்படியான தனிப்பட்ட பதிவு தேவையா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் இணையத்தில் இரு தரப்பு மோதலே உருவாகியுள்ளது என்றால் மிகையாகாது.
AI புகைப்படமா?
அதைவிட அதிகமாக பேசப்பட்ட விடயம் என்னவென்றால், அந்த புகைப்படம் உண்மையா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் தான்.
நெட்டிசன்களில் ஒரு தரப்பு, “லைட்டிங் சரியாக இல்லை, ஃப்ரேமிங் இயல்பாக இல்லை, இது AI ஆல் உருவாக்கப்பட்ட புகைப்படம் போல தெரிகிறது” என்று வாதிட்டது.
இன்னொருபக்கம், “இது பழைய புகைப்படத்தை மாற்றி உருவாக்கியிருக்கலாம்” என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கிடைத்த ஆதாரம்
இந்த சர்ச்சை தீயாக பரவிக்கொண்டிருந்த நிலையில், இன்று இன்று முதலமைச்சர் விஜய் சிறப்பு அரசு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, எடுக்கப்பட்ட வீடியோக்கள் இந்த விவாதத்துக்கு புதிய திருப்பத்தை கொடுத்தன.
அந்த நிகழ்ச்சியில் பேருந்தில் பயணித்தபடி விஜய் எடுத்துக் கொண்ட வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலானது. அதில் முக்கியமாக கவனம் பெற்றது விஜயின் கையில் இருந்த மொபைல் போன்.

அதே நேரத்தில் த்ரிஷா பகிர்ந்த புகைப்படத்தில் கேக் அருகே மேசையில் இருந்ததாக கூறப்பட்ட போனுடன் அது ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதனால் இது உண்மையான புகைப்படம் தான் என்று ஒரு சாரார் இணையத்தில் ஆதாரங்களை முன்வைத்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |