வடித்த சாதத்தை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா? எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?
இன்றைய அவசர கால உலகில் சமைத்த உணவுகளை பிரிட்ஜில் சேமித்துவைத்துவிட்டு மறுநாள் சூடுபண்ணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வுருகிறது.
இது அந்நேரத்தில் நமக்கு சிரமம் இல்லாமல் இருந்தாலும், பல உடல்நலக்கோளாறுகளுக்கு காரணமாகின்றன.
ப்ரிட்ஜில் சமைத்த உணவுகளை வைக்கும் போது எப்படி வைக்க வேண்டும்? எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும்? அதிக நாட்கள் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ,
சாதத்தை பிரிட்ஜில் சேமித்து வைத்து இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும், காற்றுபுகாதபடி முறையாக சாதத்தை பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
சாதத்தில் இருந்து கெட்ட வாசனை வரும் பட்சத்தில், அதை சாப்பிடாமல் இருப்பதே நல்லது, ஏனெனில் பக்டீரியாக்கள் பல்கிப்பெருகி இருக்கலாம்.
அதையும் மீறி சாப்பிடும் பட்சத்தில், புட் பாய்சனிங், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படலாம்.
சாதத்தை பிரிட்ஜில் இருந்து எடுத்ததும் உடனடியாக சாப்பிடாமல், சிறிது நேரம் அறை வைப்பநிலையில் வைத்த பின்னர் சாப்பிட வேண்டும்.
இதேபோன்று வேகவைத்த பருப்பை இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும். வேகவைத்த பருப்பை நீண்ட நாட்கள் கழித்து சாப்பிடுவது வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தலாம்.