viral video: பாம்பின் தோலை உதிர்க்க உதவுவது சரியா? மெய்சிலிர்க வைக்கும் காணொளி
பொதுவாகவே பாம்புகள் தங்களின் தோலை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் உதிர்த்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இது Ecdysis அல்லது moulting என குறிப்பிடப்படுகின்றது.
பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது மேற்புற தோலை தானாகவே உதிர்த்துக்கொள்ளும்.
இது இயற்கையாகவே பாம்புகளின் உடலில் நிகழும் ஒரு செயற்பாடு. அதனை பாம்புகள் தானாகவே செய்துக்கொள்ளும் ஆற்றலுடன் தான் படைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் பெரும்பாலும் காற்று மிகவும் வறண்டு இருக்கும் காலங்களில், தோல் ஒரே துண்டாக வராமல் துண்டுகளாக உதிர்ந்து விடுகிறது. இவ்வாறான சமயங்களில் பாம்புகள் தங்கள் தோலை அகற்ற சிறமப்படுவதாகவும் அதற்கு தோலை அகற்ற உதவி செய்வதில் எந்த தவறும் இல்லை எனவும் விலங்கியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போது நபரொருவர் மலைப்பாம்பின் சட்டடையை அதாவது அதன் மேற்புற தோலை அகற்றுவதற்கு உதவி செய்யும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |