பூரானை ஏன் கொல்லக்கூடாதுன்னு தெரியுமா? பூரான் சொல்லும் சகுணம் இது தானாம்
பொதுவாகவே இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் பூனை, காகம், பல்லி போன்ற பல உயிரனங்களை வைத்து சகுணம் பார்க்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பூரானை வைத்தும் பல்வேறு சகுணம் பார்க்கப்படுகின்றது. பூரான் வீட்டிற்குள் வந்தாலோ அல்லது பூரான் பற்றிய கனவுகள் வந்தாலோ அதற்கான பலன்கள் என்ன என்பது குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
பூரான் வீட்டிற்கு வந்தால் என்ன பலன்?
வீட்டிற்குள் பூரான் வந்தால் செய்வினை மூலம் பணக்கஷ்டம் மன ரீதியில் பாரிய குழப்பம் ஏற்படப்போகின்றது என்பது ஐதீகம். இல்லாவிடில் யாரேனும் நோய்வாய்ப்பட போகிறார்கள் என்பது அர்த்தம்.
வீட்டை சுற்றி அசுத்தம் அல்லது கழிவுகள் நிரம்பியிருந்தால் பூரான் வரும் ஆனால் இவை எதுவுமே இல்லாமல் பூரான் வருகிறது என்றால் ஒரு பெரிய கஷ்டம் வரப்போவதை அவை எச்சரிக்கின்றது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
வீட்டிற்கு பூரான் வருவது முதற்காரணம் என்னவென்றால், நம் வீட்டை சுற்றி இருக்கும் சூழ்நிலையாகும். எப்படியேனில், ஒருவேளை நம் வீட்டை சுற்றி சேரும், சகதியுமாக இருந்தால் கண்டிப்பாக பூரான் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கு. ஏனெனில், அசுத்தம் நிறைந்த இடத்தில் தான் அவை அதிகளவில் வசிக்குமாம்.
ஜோதிட சாஸ்திரத்திஜன் பிரகாரம் பூரான் மோசமான ராகுவின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. வீட்டின் படிக்கட்டுகள், கழிவறைகளில் பூரானை கண்டால் அது கெட்ட சகுணமாககும். இதனால் ராகுவால் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம்.
ஆனால் வீட்டின் பூஜை அறையில் பூரானை கண்டால், அது மிகவும் நல்ல சகுணமாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறு பூரானை கண்டால் விரைவில் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடிவரப்போகின்றது என அர்த்தம். வாழ்வில் அனைத்து செழிப்பையும் பெறம் வாய்ப்பு அமையும்.
பூரானை கனவில் கண்டாலும் அதை வைத்து சகுணம் பார்க்கப்படுகின்றது. கனவில் இறந்த பூரான் வந்தால் வாழ்வில் எதிர்ப்பாராத வகையில் பாரிய பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
வீட்டில் அல்லது வீட்டுக்கு வெளியில் பூரான் ஊர்ந்து செல்வதை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது. இதனால் ஏதோ ஒரு விதத்தில் நன்மை நடக்கும் என நம்பப்படுகின்றது.
கனவில் ஊர்ந்து செல்லும் பூரானை கண்பதும் மிகவும் மங்களகரமானது. பெரிய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்பு அமையப்போகின்றது. என்று அர்த்தமாம்.
பூரானை ஏன் கொல்லக்கூடாது?
நம் வீடு சுத்தமாக இல்லையென்றால் பூரான் வீட்டிற்கு வரும். எனவேதான், நம் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என அச்சரிப்பதாகவே பூரான்கள் வீடி்டிற்குள் வரும்.
அதுமட்டுமின்றி, விஷப் பூச்சிகள் தான் பூரானின் உணவு. எங்கு நிறைய விஷப் பூச்சிகள் வாழ்கிறதோ அங்கு பூரானின் நடமாட்டம் இருக்கும். இது விஷ பூச்சிகளிமிருந்து மனிதர்களை பாதுகாக்கின்றது. எனவே தான் பூரானை கொல்லக்கூடாது என சாஸ்திரங்களில் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)