கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா?
பொதுவாக சில சமயங்களில் சாலையில் நாம் நடந்து செல்லும் போது கீழே பணம் விழுந்து கிடப்பதை பார்த்திருப்போம். இவ்வாறு கீழே கிடக்கும் பணத்தினை எடுக்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பெரும்பலானவர்கள் மனதில் எழுந்திருக்கும்.
இந்த விஷயத்தை நானும் நீங்களும் மட்டுமல்ல.. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவித்திருக்க கூடும்.

சாலையில் விழுந்த பணத்தை எடுப்பது நல்லதா கெட்டதா? என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடம் என்ன குறிப்பிடுகின்றது என தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
சாலையில் கிடக்கும் பணத்தை எடுக்கலாமா?
சாலையில் நடந்து செல்லும் போது, சாலையில் ஒரு நோட்டு அல்லது நாணயம் கீழே கிடப்பதை நம்மில் பலரும் கண்டிருக்க கூடும். அப்படி கண்டவடன் இந்தப் பணத்தை என்ன செய்வது? என்ற கேள்வி கட்டாயம் ஏற்படும்.

இதற்கு காரணம் நாம் சிறு வயதாக இருக்கும் பொழுதே நமக்கு அடுத்தவருடைய பணத்தை எடுப்பதில் சிறிது தயக்கம் இருந்திருக்க செய்யும்.
நம்முடைய வாழ்க்கை முறையும், நம்முடைய வளர்ப்பு முறையும் அப்படியான ஒன்றாக இருக்கிறது. அடுத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பணத்தை சம்பாதித்து இருப்பார்கள்?

அதை நாம் எடுத்துக் கொள்வதால் அவர்கள் மனதளவில் படும் கஷ்டம் நம் வாழ்வை பாதிக்கும் போன்ற விடயங்களை தான் நல்ல பெற்றோர் சொல்லி வளர்த்திருப்பார்கள். இந்த விடயங்கள் அனைத்தும் அந்த பணத்தை பார்த்தவுடன் நம் மனதில் தோன்ற ஆரம்பித்துவிடும்.
அதனால் சிலர் அதை எடுத்து ஏழைகளுக்கு கொடுத்துவிடுவார்கள் அல்லது கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தி விடுவார்கள். ஆனால் சாஸ்திரங்களின் அடிப்படையில் கீழே கிடக்கும் பணத்தை குறிப்பாக நாணயத்தை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது.

அவ்வாறு நாணயங்களை காண்பது முன்னோர்கள் வழங்கும் ஆசியாகவும் மற்றும் மிகவும் மங்களகரமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நாணயங்களை கண்டால் அது பல நேர்மறையாக விடயங்கள் எதிர்காலத்தில் நமக்கு நிகழப்போவதை உணர்துவதாகவும் வாஸ்து சாஸ்திரம் நம்புகின்றது.

அதனை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அவ்வாறு சாலையில் கிடைக்கும் நாணயம் பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எனவே இவ்வாறான பணத்தை ஒருபோதும் செலவு செய்யவும் கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        