சரியான நேரத்தில் உணவை சாப்பிடாதவரா நீங்கள்? இனி அந்த தவறை செய்யாதீங்க
நாம் சரியான நேரத்திற்கு சாப்பிடவில்லை என்றால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்மில் பெரும்பாலான நபர்கள் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு உணவு மிகவும் முக்கியமானது.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமாகவும், சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் காலை உணவை 12 மணிக்கும், மதிய உணவை 4 மணிக்கும், இரவு உணவை 11 மணிக்கும் சாப்பிடுகின்றனர்.
ஊட்டச்சத்தை வழங்கும் உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உடல் எனர்ஜியுடனும் இருக்கும்.

சரியான நேரத்தில் சாப்பிடவும்
நேரம் தவறி சாப்பிடும் போது அவை ஒற்றைத் தலைவலி பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையானது நிரந்தரமாகவும் மாறிவிடுமாம்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்ற சத்துக்களும் மிகவும் முக்கியம். நாம் சாப்பிடும் நேரமும் அதைவிட முக்கியம் என்று மருத்துவர் கூறுகின்றனர்.

நேரம் தவறி சாப்பிடுவதால் ஏற்படும் தலைவலியானது, நாம் சற்று ஓய்வு எடுத்தாலோ, தூங்கி எழுந்தாலோ, சில மணி நேரத்திலோ சரியாக வாய்ப்பில்லையாம். அதுவே சாதாரண தலைவலி என்றால் இவ்வாறு நாம் செய்தாலே போதும்.
ஆனால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் யாரோ தலையில் கனமான பொருளை கொண்டு அடிப்பது போன்றும், இந்த வலியானது தொடர்ந்து 3 நாட்கள் வரையும் நீடிக்குமாம்.
ஆகவே சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். வீட்டில் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே சரியான நேரத்தில் சாப்பிட பழகி விட வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |