இரும்புச்சத்து நிறைந்த 'முருங்கைக் கீரை' சட்னி ரெசிபி..!
அதிக சத்துக்களைக் கொண்ட முருங்கைக் கீரையில் சட்னி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இரும்புச் சத்து அதிகம் கொண்ட முருங்கைக் கீரையில் சட்னி என்பதை இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள். புதிய ரெசிபியின் செய்முறையை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக் கீரை
தக்காளி - 1
மல்லி விதை - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
கடலை எண்ணெய் - தேவையான அளவு
சட்னி தாளிக்க :
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
செய்முறை
முருங்கைக் கீரையின் இலைகளை உருவி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி விதை, கடலை பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றினை சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வந்தவுடன் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கி பின்பு இதனுடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அதனுடன் அரைத்து வைத்திருந்த கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இறக்கினால் முருங்கைக் கீரை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |