பெண்களே! இரும்புச்சத்து குறைபாடா? அலட்சியமாக இருக்காதீங்க
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு என்பது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுகின்றனர்.
இரும்புச்சத்து என்பது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தனிமம் ஆகும். இவை ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமாக இருக்கின்றது. மேலும் இந்த சத்து குறைவினால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.
என்ன பிரச்சனைகள் ஏற்படும்?
இரும்புச்சத்து குறைவினால் முதலில் உடம்பில் ஹீமோகுளோபின் அளவும் குறைந்துவிடும். இதனால் அனீமியா ஏற்படுவதுடன், செல்கள் உற்பத்தி செய்வதிலும் பிரச்சனை ஏற்படும். மேலும் தலைச்சுற்று, களைப்பு, முகம் வெளிர்தல், சுவாச பாதிப்பு ஏற்படும்.
கர்ப்பிணிகள் இரும்புச்சத்து குறைவினால் அவதிப்பட்டால் கருவில் குழந்தையின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். குழந்தையின் எடை குறைவதுடன், பிறக்கும் முன்பே குழந்தைக்கு அதிக பிரச்சனை ஏற்படும்.
பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மன அழுத்தம், களைப்பு ஏற்படுவதுடன் தினசரி வாழ்க்கை பாதிக்கும். அன்றாட செயல்பாடுகளில் ஆர்வம் குறைந்துவிடும்.
இரும்புச் சத்து குறைவினால் தோல் வெளிர்ந்து தோன்றுவதுடன், நகங்கள் முறிந்து போவதையும் நீங்கள் அறியலாம்.
இரும்புச்சத்து குறைவு பெண்களில் சுவாசத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, அதிக உழைப்பு அல்லது அதிக வேலை செய்யும் போது சுவாசப் பிரச்சனை அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |