ஆனந்த கண்ணீரில் இர்ஃபான்- ஆலியா தம்பதி- மகள் கொடுத்த முதல் கியூட் ரியாக்ஷன்
ஆனந்த கண்ணீருடன் மகளை வரவேற்ற இர்ஃபான்- ஆலியாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
யூடியூபர் இர்பான்
சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமானவர்களில் யூடியூபர் இர்பானும் ஒருவர்.இவர் கடந்த வருடம் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
ஆலியா கர்ப்பமாக இருக்கும் பொழுது இந்திய சட்டத்தை மீறி வெளிநாட்டிற்கு சென்று குழந்தை பாலினம் பற்றி தெரிந்துக் கொண்டார்.
இதனை ஒரு விழாவாக நடத்தி காணொளியொன்றையும் வெளியிட்டார். பின்னர் குழந்தையின் பாலினம் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. பாரிய கொந்தளிப்பிற்கு பின்னர் இர்பான் காணொளியை சேனலில் இருந்து இல்லாமலாக்கியதுடன் பொது மன்னிப்பும் கேட்டார்.
குழந்தை பிறக்கும் காணொளி
இந்த நிலையில், இர்பான் காணொளியில் கூறிய போன்று தற்போது பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். தந்தையாகிய பின்னர் அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்பதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாக பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், வலி தாங்க முடியாமல் ஆலியா அழுவதும், ஆலியாவுக்கு நான் உன்னோடு தான் இருக்கின்றேன் என தனது அன்பை வெளிப்படுத்துகிறார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை ஆலியாவைப்போல் இருப்பதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |