ஈராக்கிய பெண்கள் உலகத்திலேயே எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள் தெரியுமா?
உலகத்தில் பெண்கள் ஆண்கள் என இருபாலினம் இருக்கிறது. ஆனால் பெண்கள் தான் ஆண்களை விட அழகான இனமாக தற்போது வரை இருக்கிறது. உலகத்தில் அழகு என்றால் அது பெண் தான்.
அழகு என்பது முகம் மட்டம் அல்ல அவர்களின் சிறந்த குணம் மற்றும் நடத்தை தான். எந்த ஒரு விடயம் அழகாக இருந்தாலும் அதை பெண்கள் நாடுவார்கள். இதன் காரமாக தான் மிகவும் அழகானவர்கள் பெண்கள் என கூறப்படுகின்றது.
உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் ஒவ்வொரு விதமாக வாழ்கின்றனர். அவர்கள் வாழும் இடத்தை பொறுத்து அவர்களின் பழக்கவழக்கங்களும் இருக்கும்.
அந்த வகையில் எல்லா பெண்களும் அழகு தான். அனால் ஈராக்கிய பெண்கள் ஒரு வித அழகாக இருப்பார்கள். அவர்களின் அழக ரகசியம் அவர்களின் உணவு தினசரி வழக்கம் என்பவற்றை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஈராக்கிய பெண்கள்
ஈராக்கிய பெண்கள் அன்றாட உணவில் பல்கர் கோதுமையை பயன்படுத்துகின்றனர். இதை சாப்பிடுதால் அவாகள் சருமம் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.
ஆர்கன் எண்ணெய் இது 'திரவத்தங்கம்' என அழைக்கப்படுகின்றது. இந்த எண்ணெயை ஈராக்கிய பெண்கள் குளிக்கும் போத மசாஸ் செய்து குளிக்கின்றனர். இதனால் அவர்களின் சருமம் அழகாக இருக்கின்றது.
ஈராக்கின் பாரமபரிய உணவு டோல்மா திராட்சை இலைகளின் அரிசி தான். இதில் காய்கறி அல்லது பழங்கள் போட்டு தயார் செய்து சாப்பிடுகிறார்கள்.இது சருமப்பொலிவிற்கும் கூந்தலின் பொலிவிற்கம் பயன்படுகிறது.
ஷினினா பானம். இது தயிர் மற்றும் புதினாவில் இருந்து தயாரிக்கிறார்கள். இந்த பானத்தை ஈராக்கி பெண்கள் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். இதனால் அவாகளின் சருமம் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் காணப்படகின்றது.
ஈராக்கியர்கள் உணவு சாப்பிடும் போது பேரிச்சம்பழத்தை உணவில் முக்கிய அங்கமாக எடுத்துக்கொள்வார்கள்.இதில் இருக்கும் வைட்டமின்கள் சரும நிறத்தை மேம்படத்துவதோடு கூந்தலையும் பொலிவாக்கின்றன.
தினமம் காலையில் அல்லது தேவைப்பட்ட நேரங்களில் தயிர் மற்றும் காய்கறிகள் சேர்த்த சூப் தயார் செய்து குடிக்கிறார்கள் இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இது மட்டுமல்லாமல் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்கவும் பயன்படுகிறது.சரிவிகித உணவு முறை என்பது மிகவும் முக்கியமாகும்.இது உடல் ஆராக்கியத்தில் 100 வீதம் முக்கியமாகும்.இந்த வாழ்க்கை முறையும் பழக்க வழக்கமும்தான் ஈராக்கிய பெண்களின் அழகு ரகசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |