போரால் டுபாயில் சிக்கிக்கொண்ட லப்பர் பந்து பட நடிகை! உருக்கமான பேட்டி
லப்பர் பந்து பட புகழ் நடிகை சுவாசிகா அபுதாபியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக தவித்திருந்த நிலையில், தற்போது விமானம் மூலமாக நாடு திரும்பியிருக்கும் இவர் ஊடகங்களுக்கு கொடுத்துள்ள உருக்கமான பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சுவாசிகா
லப்பர் பந்து திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக செம Bold ஆன காதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை சுவாசிகா.

இதில் ஹீரோ, ஹீரோயினை விட, தினேஷ் , ஸ்வாசிகா ஜோடியின் ரொமான்ஸ் தான் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
தற்போது ஸ்வாசிகாவுக்கு வயது 33 தான் ஆகிறது. ஹீரோயினாக நடிக்கும் வயதில், ஹீரோயினுக்கு அம்மா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை குவித்தார்.

தமிழில் வைகை, கோரிப்பாளையம், சாட்டை ஆகிய படங்களில் அதற்கு முன்பே நடித்திருந்தாலும் சுவாசிகாவிற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது என்றால் இது லப்பர் பந்து திரைப்படம் தான்.
சுவாசிக்கா அறிமுகமான போது இவருக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் எதிர்ப்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகை ஸ்வாசிகா சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்தபோது அவர் தன்னுடன் நடித்த பிரேம் ஜேக்கப் என்பவரை காதலிக்க தொடங்கினார். இந்த ஜோடிக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

சுவாசிகா பேட்டி
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் - இரான் போர் காரணமாக அரபு நாடுகளிலும் கடும் பதற்றம் நிலவியது. இரான் தாக்குதல் நடத்திய காரணத்தால் துபாய் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.

அபுதாபில் சிக்கிக்கொண்ட நடிகை சுவாசிகா நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக கடும் பதற்றத்தில் இருந்து தற்போது விமானம் மூலமாக நாடு திரும்பி இருக்கின்றார்.நாடு திரும்பிய பின் அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவர் குறிப்பிடுகையில், அங்கு பதற்றம் அதிகமாக இல்லை. ஆனால் நான் வேறு நாட்டவர் என்பதால் இயல்பாகவே அதிகம் பயம் இருந்தது. ஆனால் விமான நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து கொடுத்தது அதனால் தற்போது பாதுகாப்பாக நாடு திரும்பியிருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | Kochi, Kerala: Malayalam Actress Swasika, who arrived at Cochin International Airport from Abu Dhabi, says, "Heavy panic situation is not there, but still, as we are from another country, so definitely we will get a little panic... I was supposed to come on 28th… pic.twitter.com/AS5XloeHTT
— ANI (@ANI) March 4, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |