கோடை காலத்தில் பழங்கள் அழுகாமல் இருக்கணுமா? அப்போ இத பண்ணுங்க
பொதுவாக எல்லோரும் பழங்களை சாப்பிடுவார்கள். பழங்களில் அதிகமான வைட்டமின்கள் காணப்படுகின்றன. நோயாளிகள் எதுவும் சாப்பிட முடியாத பட்சத்தில் பழங்களை தாராளமாக உண்ணலாம்.
இந்த சுட்டெரிக்கும் வெயிலில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் கோடை காலத்தில் எல்லோரது வீட்டிலும் பழங்கள் இருக்கும்.
ஆனால் இந்த கோடை காலத்தில் நாம் வாங்கி வைத்திருக்கும் பழங்கள் ஒரு நாள் கூட இருக்காமல் அழுகி விடுகின்றன.
எனவே கோடைகாலத்தில் பழங்களை அழுகாமல் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கும் சில வழிமுறைகளை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
பழங்களை எப்படி அழுகாமல் பாதுகாப்பது?
கோடைகாலத்தில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். அதில் நிறைய வைட்டமின்களும் தாதுக்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
இதனால் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பழங்கள் அப்படியே இருக்காமல் பழுப்பு நிறமாகின்றன சில அழுகி விடுகின்றன.
இதனால் பழங்கள் வாங்கி வந்தவுடன் நீங்கள் ஒரு சில்வர் பாத்திரத்தில் உப்பு மற்றும் தண்ணீர் கலவையை சேர்க்க வேண்டும்.
இந்த தண்ணீரில், பழங்களை ஒவ்வொன்றாகப் போட்டு, குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் அப்படியே வைக்கவும். இப்போது, ஒரு மணி நேரம் கழித்து பழங்களை வெளியே எடுத்து சிறிது தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதால் பழங்கள் கெட்டுப்போகாது. பழங்கள் பழுப்பு நிறமாக மாறாமல் இருக்க காற்று புகாத பைகளில் பழங்களை போட்டு அடைத்து வைக்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பழங்களில் ஆக்ஸிஜனேற்ற செயல்முறையைத் தடுக்க பழங்களின் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை தெளித்து வைக்கலாம். தண்ணீரில் தேன் கலந்து வெட்டப்பட்ட பழங்களின் மேல் தெளித்து வைத்தால் அது கெட்டுப்போகாது.
முலாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி போன்ற பழங்களை தனிமைப்டுத்தி வைக்க வேண்டும். இது பழுப்பு நிறமாக மாறுவது மட்டுமல்லாமல் பிற பழங்களையும் அதே போல் மாற்றுவதால் இவற்றை தனியாக வைக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |